அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது முதல்வர் கடும் கோபம்
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது முதல்வர் கடும் கோபம்
ADDED : ஜூன் 10, 2024 05:28 AM

பெங்களூரு : லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில், காங்கிரஸ் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றதால், தன்னை சந்திக்க வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது, முதல்வர் சித்தராமையா கோபத்தை வெளிப்படுத்துவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் அரசு நடக்கிறது. இந்த அரசு ஐந்து வாக்குறுதி திட்டங்களை, அமல்படுத்தி உள்ளது.
இதன்மூலம் லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில், காங்கிரசை 20 இடங்களில் வெற்றி பெற வைக்கலாம் என்று, முதல்வர் சித்தராமையா கணக்கு போட்டு இருந்தார். ஆனால் அவரது கணக்கு தலைகீழாக மாறியது.
காங்கிரஸ் வெறும் 9 இடங்களில் மட்டுமே வென்றது. அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களின் பெரும்பாலான தொகுதிகளில், காங்கிரசை விட பா.ஜ., அதிக ஓட்டுகள் பெற்றது. இதனால் முதல்வர் சித்தராமையா கடுப்பில் உள்ளார்.
தன்னை சந்திக்க வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களிடம் உங்கள் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, எவ்வளவு அதிக ஓட்டுகள் வாங்கி கொடுத்தீர்கள் என்று கேட்கிறார்.
அதிக ஓட்டுகள் வாங்கி கொடுத்திருந்தால், ஒன்றும் சொல்வது இல்லை. குறைந்த ஓட்டுகள் வாங்கி கொடுத்தவர்களிடம், கோபத்தை வெளிப்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் முதல்வரை சந்திக்க செல்லவே, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தயங்குவதாக சொல்லப்படுகிறது.

