ADDED : செப் 05, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு : கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பாலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நிஷாத், 41. வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவர், நேற்று காலை மீட்டனா என்ற இடத்தில் ரயில் மோதி பலியான நிலையில் அப்பகுதி மக்கள் கண்டனர். ஒற்றைப்பாலம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
போலீசார் கூறுகையில், 'ஆட்டோவை உரிமையாளர் விற்றதில், முகமது நிஷாத் கடும் மன உளைச்சலில் இருந்தார். தனியார் நிறுவனங்களில் கடன் இருந்ததால், கடனை வசூலிக்க மிரட்டி உள்ளனர். இதனால், இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதுகிறோம்,' என்றனர்.