sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

14 தொகுதிகளில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு 'மாஜி' முதல்வர், மத்திய அமைச்சர் தலைவிதி நிர்ணயம்

/

14 தொகுதிகளில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு 'மாஜி' முதல்வர், மத்திய அமைச்சர் தலைவிதி நிர்ணயம்

14 தொகுதிகளில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு 'மாஜி' முதல்வர், மத்திய அமைச்சர் தலைவிதி நிர்ணயம்

14 தொகுதிகளில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு 'மாஜி' முதல்வர், மத்திய அமைச்சர் தலைவிதி நிர்ணயம்


ADDED : ஏப் 25, 2024 11:27 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு,: கர்நாடகாவில் முதல் கட்டமாக, 14 தொகுதிகளில் இன்று லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. முன்னாள் முதல்வர் குமாரசாமி, மத்திய இணை அமைச்சர் ஷோபா, துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ், மன்னர் யதுவீர் உட்பட 247 வேட்பாளர்களின் தலைவிதி நிர்ணயம் செய்யப்படுகிறது.

கர்நாடகாவில், ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடக்கிறது.

முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்தி, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இந்த 14 தொகுதிகளில், பாதுகாப்பு பணியில் 50,055 போலீசாரும்; 1,39,495 தேர்தல் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். 1.44 கோடி ஆண்கள்; 1.43 கோடி பெண்கள்; 3,067 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 2.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

247 வேட்பாளர்கள்


இம்முறை, காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ., 11, ம.ஜ.த., 3 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. முதல் கட்ட தேர்தல் நடக்கும் 14 லோக்சபா தொகுதிகளில், 247 வேட்பாளர்கள் இறுதி களத்தில் உள்ளனர். இதில், 226 ஆண்கள், 21 பெண்கள் அடங்குவர்.

இதில், பிரதானமாக ம.ஜ.த., வேட்பாளர்களான மாண்டியாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமியும்; ஹாசனில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவும் களமிறங்கி உள்ளனர்.

பா.ஜ., சார்பில், பெங்., வடக்கில், மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா; மைசூரில் மன்னர் யதுவீர்; பெங்., தெற்கில், அக்கட்சியின் தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா; பெங்., சென்ட்ரலில் பி.சி.மோகன்; உடுப்பி - சிக்கமகளூரில் சட்ட மேலவை எதிர்க்கட்சி தலைவர் கோட்டா சீனிவாச பூஜாரி; சித்ரதுர்காவில் முன்னாள் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோள்; துமகூரில் முன்னாள் அமைச்சர் சோமண்ணா போட்டியிடுகின்றனர்.

காங்கிரஸ் சார்பில், பெங்., வடக்கில் அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ராஜிவ்கவுடா; பெங்., தெற்கில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் சவும்யாரெட்டி; பெங்., சென்ட்ரலில் மன்சூர் அலிகான்; சாம்ராஜ்நகரில் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவின் மகன் சுனில்போஸ் ஆகியோர் முக்கிய புள்ளிகளாக உள்ளனர்.

ஆனால், நாடே எதிர்நோக்கும் தொகுதியாக பெங்., ரூரல் தொகுதி பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில், துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி சுரேஷ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து, பிரபல இதய மருத்துவரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகனுமான மஞ்சுநாத் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார்.

துணை ராணுவம்


தம்பியை வெற்றி பெற செய்வதற்காக, துணை முதல்வர் பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டுள்ளார். பா.ஜ., சார்பில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி பார்வையில் சாணக்கியத்தனம் செய்து, வியூகம் வகுத்துள்ளார். யார் வெற்றி பெறுவார் என்பதை நாடே உற்று நோக்குகிறது. மிகவும் பதற்றம் மிகுந்த தொகுதியாக உள்ளதால், துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தலில், அதிகபட்சமாக, சிக்கபல்லாபூரில் 29 பேரும்; குறைந்தபட்சமாக தட்சிண கன்னடாவில் ஒன்பது பேரும் போட்டியிடுகின்றனர். ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அதிகபட்சமாக 16 வேட்பாளர்கள் இடம்பெறலாம். அதற்கு மேல் இருந்தால், இரண்டாவது இயந்திரம் இணைக்கப்பட வேண்டும்.

அந்த வகையில், சித்ரதுர்கா, துமகூரு, மைசூரு, பெங்., வடக்கு, பெங்., சென்ட்ரல், பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் ஆகிய லோக்சபா தொகுதிகளில், தலா இரண்டு மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

...பாக்ஸ்...

'செல்பி பாயின்ட்'

முதல் கட்ட தேர்தலுக்கு மொத்தம், 30,602 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டளிக்க வருவோர், 'செல்பி' புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், ஓட்டுச்சாவடி உள்ளே, மொபைல் போன் எடுத்து செல்ல அனுமதி கிடையாது.

அதே நேரம், வாக்காளர்களுக்காக, ஓட்டுச்சாவடிகளுக்கும் வெளியே, 'செல்பி பாயின்ட்' ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. ஓட்டளித்த பின், 'செல்பி' எடுத்து மகிழலாம்.

...பாக்ஸ்...

'எந்தெந்த தொகுதியில் யார், யார்?

14 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

தொகுதி பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி சின்னம் காங்கிரஸ் சின்னம் சுயேச்சை

உடுப்பி - சிக்கமகளூரு கோட்டா சீனிவாச பூஜாரி ஜெயபிரகாஷ்

ஹாசன் பிரஜ்வல் ரேவண்ணா ஸ்ரேயஷ் படேல்

தட்சிண கன்னடா பிரிஜேஷ் சவுடா பத்மராஜ்

சித்ரதுர்கா கோவிந்த் கார்ஜோள் சந்திரப்பா

துமகூரு சோமண்ணா முத்தஹனுமே கவுடா

மாண்டியா குமாரசாமி வெங்கடராமே கவுடா

மைசூரு யதுவீர் லட்சுமண்

சாம்ராஜ் நகர் பால்ராஜ் சுனில் போஸ்

பெங்களூரு ரூரல் மஞ்சுநாத் சுரேஷ்

பெங்களூரு வடக்கு ேஷாபா ராஜிவ் கவுடா

பெங்களூரு சென்ட்ரல் மோகன் மன்சூர் அலி கான்

பெங்களூரு தெற்கு தேஜஸ்வி சூர்யா சவுமியா ரெட்டி

சிக்கபல்லாபூர் சுதாகர் ரக் ஷா ராமையா

கோலார் மல்லேஸ் பாபு கவுதம்

* மகளிரை ஈர்க்க 'பிங்க் பூத்'

மகளிர் வாக்காளர்களை ஈர்க்கும் நோக்கில், தேர்தல் ஆணையம், 'பிங்க் ஓட்டுச்சாவடி' அமைத்துள்ளது. இதில் பணியாற்றும் ஊழியர்களும் பெண்கள் தான்.

பெங்களூரின் மல்லேஸ்வரம் சட்டசபை தொகுதியில், ஒரு பிங்க் பூத் அமைந்து உள்ளது. இந்த பூத் மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. சின்ன குழந்தையின் பிறந்த நாள் பார்ட்டிக்கு தயாரான ஹால் போன்று தென்படுகிறது. பிங் நிற பலுான்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகள் என, அனைவரும் பெண்கள் தான், பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் ஓட்டு போட வேண்டும் என்பதே, பிங்க் பூத் அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.

***






      Dinamalar
      Follow us