ADDED : ஜூன் 30, 2024 10:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராம்நகர்: ஹெல்மெட் போடாமல் பைக்கில் சென்றவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸ்காரர்களை, மாகடி முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் மிரட்டியுள்ளார்.
ராம்நகர் மாகடி வெங்கடேஸ்வரா காலனியில் நேற்று காலை, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு, அபராதம் விதித்தனர்.
ஊருக்குள் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால், எப்படி அபராதம் விதிக்கலாம் என, போலீசாரிடம், வாகன ஓட்டிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த, மாகடி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
'அதிகம் விதிகளை கடைப்பிடித்தால், உங்களை உங்கள் ஊருக்கே அனுப்பி விடுவேன்' என்று மிரட்டும் வகையில் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.