ADDED : செப் 02, 2024 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்கொண்டா: தெலுங்கானாவின் ஹைதராபாதில் இருந்து நல்கொண்டா மாவட்டத்தின் மிரியால்குடா பகுதிக்கு ஒரு குடும்பத்தினர் நேற்று காரில் சென்றனர்.
அப்போது வேமுலாபள்ளி பகுதியை ஒட்டியுள்ள நாகர்ஜுனா சாகர் அணை கால்வாய் அருகே காரை நிறுத்தி, புகைப்படம் எடுக்க திட்டமிட்டனர்.
தொடர் கனமழையால், நாகர்ஜுனா சாகர் அணையின் பாதுகாப்பை கருதி சமீபத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
இதைப் பார்த்த அந்த குடும்பத்தை சேர்ந்த இளம்பெண், தன் மொபைல் போனில் செல்பி எடுத்தபோது, நிலைதடுமாறி தண்ணீருக்குள் தவறி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று, அப்பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். நீரின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால், நீண்டநேரம் போராடி அந்தப் பெண்ணை கயிறு கட்டி கரைக்கு மீட்டு வந்தனர்.