ADDED : ஜூலை 06, 2024 02:31 AM
பாசிம் விஹார்: புறநகர் டில்லியில் தன் சகோதரனை தாக்கிய ஆட்டோ டிரைவரை பேஸ்மட்டையால் சிறுமி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
புறநகர் டில்லியின் பாசிம் விஹார் பகுதியில், இ-ஆட்டோவில் ஒரு வாலிபரும் அவரது சகோதரியும் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் ஆட்டோவை முந்திச்சென்ற ஒரு ஆட்டோ, வழிமறித்து நின்றது.
அதில் இருந்து இறங்கிய ஆட்டோ டிரைவர், இ-ஆட்டோ டிரைவரை தாக்கத் துவங்கினார். தன் ஆட்டோவுக்கு வழிவிடாமல் சென்றதாகக் கூறி அடித்தார். இதை பார்த்த இ-ஆட்டோ டிரைவரின் சகோதரி, ஆட்டோவில் இருந்த பேஸ்பால் மட்டையை எடுத்து, சகோதரனை அடித்த ஆட்டோ டிரைவரை சரமாரியாக தாக்கினார்.
இதை அந்த வழியே சென்றவர்கள், தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இது வைரல் ஆனது. படுகாயமடைந்த ஆட்டோ டிரைவரை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் ஆட்டோ டிரைவர் சிவ்சங்கரிடம் புகாரைப் பெற்று விசாரித்து வருகின்றனர்.