sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆதிவாசிகளின் கடவுள் தொட்ட சம்பிகே மரா

/

ஆதிவாசிகளின் கடவுள் தொட்ட சம்பிகே மரா

ஆதிவாசிகளின் கடவுள் தொட்ட சம்பிகே மரா

ஆதிவாசிகளின் கடவுள் தொட்ட சம்பிகே மரா


ADDED : ஆக 22, 2024 04:23 AM

Google News

ADDED : ஆக 22, 2024 04:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகா - தமிழக மாநில எல்லையில் உள்ளது சாம்ராஜ்நகர். இங்கு உள்ள ஹனுாரில் உள்ளது பி.ஆர்.ஹில்ஸ் எனும் பிளிகிரிரங்கணபெட்டா மலை. பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான இங்கு, வார இறுதி நாட்களில் அதிக சுற்றுலா பயணியர் வருகை தருவர். பிளிகிரிரங்கண பெட்டா அருகே சுற்றுலா பயணியர் அதிகம் அறியாத ஒரு இடம் உள்ளது. அந்த இடத்தை பற்றி பார்க்கலாம்.

பிளிகிரிரங்கண பெட்டாவில் இருந்து 4 கி.மீ., துாரத்தில் உள்ளது தொட்ட சம்பிகே மரா எனும் இடம். அந்த இடத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான ஆலமரம் உள்ளது.

இந்த ஆல மரம் தோரயமாக 34 மீட்டர் உயரத்திலும், 20 மீட்டர் அகலத்திலும் உள்ளது. இந்த மரத்தின் அருகில் ஏராளமான லிங்கங்கள் உள்ளன.

ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த மக்கள், இந்த மரத்தை கடவுளாக வணங்குகின்றனர்.

இந்த மரத்தை பார்க்க செல்லும் போது, ஆதிவாசிகளை மக்களை சந்தித்து பேசும் வாய்ப்பும் கிடைக்கும். அவர்களின் பழக்க, வழக்கங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மஹா சிவராத்திரியின் போதும், இந்த ஆலமரத்தின் முன்பு ஆதிவாசி மக்கள் ஒன்று கூடி திருவிழா நடத்தி, பராம்பரிய நடனம் ஆடுவர். மரம் இருக்கும் இடத்திற்கு பின் பக்கம், காவிரி ஆற்றின் துணை நதியான பார்கவி நதி ஓடுகிறது.

இங்கு சுற்றுலா சென்றால், ஆல மரத்தின் நிழலடியில் ஓய்வு எடுப்பதுடன், ஆற்றிலும் குளித்து மகிழ்ச்சி அடையலாம்.

மரத்தின் அடியில் அமர்ந்து, குடும்பத்தினரிடம் பேசி நேரத்தை போக்குவதுடன், உற்சாகமாக மரத்தை சுற்றி ஒளிந்தும் விளையாடலாம்.

தொட்ட சம்பிகே மராவுக்கு சென்று வந்த சுற்றுலா பயணியர், மரத்தை பற்றி வர்ணிப்பதும் உண்டு.

பெங்களூரில் இருந்து தொட்ட சம்பிகே மரா 180 கி.மீ., துாரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து பிளிகிரிரங்கணபெட்டாவுக்கு நேரடி பஸ் உள்ளது. ரயிலில் சென்றால் சாம்ராஜ்நகர் சென்று அங்கிருந்து செல்ல வேண்டும்

.-நமது நிருபர் -






      Dinamalar
      Follow us