ADDED : மே 12, 2024 07:11 AM

ஸ்ரீராமபுரம்: கொடுத்த கடனை திருப்பி கேட்டு ஆபாசமாக திட்டிய நண்பரை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் ஓக்லிபுரம் சுரங்கப்பாதை அருகில் மே 1ம் தேதி அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. விசாரணை நடத்திய ஸ்ரீராமபுரம் போலீசார், இறந்தவர் திலிப், 34, பைக் மெக்கானிக் என்பதை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அவரது நண்பர் விட்டல், 45, என்பவரை கைது செய்தனர்.
விசாரணை குறித்து ஸ்ரீராமபுரம் போலீசார் கூறியதாவது:
திலிப்பிடம், விட்டல், 20,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த பணத்தை பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த திலிப், விட்டலை ஆபாசமாக திட்டி உள்ளார்.
அவமானமடைந்த விட்டல், ஏப்., 28 ம் தேதி இரவு, பணத்தை தருவதாக கூறி, ஓக்லிபுரம் சுரங்கப்பாதைக்கு வரவழைத்துள்ளார்.
அங்கு வந்த திலிப்பின் முகத்தில் உப்பு துாளை வீசி, கழுத்து, மார்பு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, விட்டல் தப்பியோடி உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.