4-வது காலாண்டில் மொத்த வளர்ச்சி 7.8 சதவீதம் : மத்திய அரசு
4-வது காலாண்டில் மொத்த வளர்ச்சி 7.8 சதவீதம் : மத்திய அரசு
UPDATED : மே 31, 2024 07:50 PM
ADDED : மே 31, 2024 07:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : 2023-24 ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் ஜி.டி.பி. எனப்படும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி அடைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்டமிடல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த ஜனவரி, மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிசம்பர் வரையிலான வருடாந்திர வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கும்.
இதன் மூலம் 2023-24 ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 8.2 சதவீதம், 2வது காலாண்டில் 8.1 சதவீதம், 3வது காலாண்டில் 8.6 சதவீதம், 4வது காலாண்டில் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது