ADDED : செப் 03, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மூடா' முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் சித்தராமையாவுக்கு பின்னடைவு ஏற்படும் என்பது, வெறும் ஊகம். இதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இல்லை. தற்போதைக்கு முதல்வர் சித்தராமையா பதவி காலியில்லை. அவர் தலைமையில், அரசு நீடிக்கும். முதல்வர் பதவி காலியாக இருந்தால், அது பற்றி பேச வாய்ப்பிருக்கும்.
இப்போது காலியாக இல்லை. யாருக்கு பதவி ஆசை இருந்தாலும், அதை ஊடகங்களின் முன்னிலையில் விவாதிக்கக் கூடாது. பா.ஜ., - எம்.பி., சுதாகர், இதற்கு முன்பு காங்கிரசில் இருந்தார். அவரது நாடி, நரம்பு, ரத்தத்தில் காங்கிரஸ் நிரம்பியிருந்தது. எனவே அவர் எங்கள் கட்சியை பற்றி, சான்றிதழ் அளிப்பதற்கு முன்பு, தன்னாய்வு செய்து கொள்ளட்டும்.
- சிவகுமார்
துணை முதல்வர்