துணை முதல்வர் பதவி காலியில்லை: அமைச்சர் செலுவராயசாமி பேட்டி
துணை முதல்வர் பதவி காலியில்லை: அமைச்சர் செலுவராயசாமி பேட்டி
ADDED : ஜூன் 27, 2024 06:43 AM

பெலகாவி: ''துணை முதல்வர் பதவி இப்போது காலியாக இல்லை,'' என்று, அமைச்சர் செலுவராயசாமி கூறியுள்ளார்.
கர்நாடக விவசாய அமைச்சர் செலுவராயசாமி பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:
காங்கிரஸ் மதசார்பற்ற நிலைப்பாடு கொண்ட கட்சி. எங்கள் கட்சியில் அனைவரும் பேசுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் பதவி குறித்து சிலர் பேசுகின்றனர்.
தற்போது அந்த பதவி காலியாக இல்லை. காலியானால் அது பற்றி பேசலாம். சென்னபட்டணா தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். அந்த தொகுதியில் துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் முகாமிட்டு உள்ளனர். இருவரில் யார் போட்டியிடுவர் என தெரியவில்லை. அவர்கள் இருவரும் அமர்ந்து பேசி முடிவெடுப்பர்.
மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி நல்லபடியாக வேலை செய்தால், எனக்கு மகிழ்ச்சி தான். அவரை பற்றி நான் எதுவும் பேச மாட்டேன். எங்கள் குடும்பம் வேறு, ரேவண்ணா குடும்பம் வேறு என்று குமாரசாமி கூறியுள்ளார். ஆனால், இது நடந்திருக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.