ADDED : ஜூன் 01, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகல்கோட்: பாகல்கோட், இளகல்லின், கந்தகல் கிராமத்தில் வசித்தவர் கீதா, 14. இவரது தம்பி ருத்ரய்யா, 10. நேற்று காலை இவர்களின் பெற்றோர் வயல் வேலைக்கு புறப்பட வேண்டியிருந்தது. எனவே மகளையும், மகனையும் உணவு சாப்பிட்டு, பள்ளிக்கு செல்லும்படி கூறிவிட்டு பெற்றோர் பணிக்கு சென்றனர்.
ஆனால் அக்காவும், தம்பியும் பள்ளிக்கு செல்லவில்லை. இருவரும் மொபைல் போனில் கேம் விளையாடியபடி அமர்ந்திருந்தனர். இவர்களின் தாத்தா வெளியே சென்றிருந்தார். பாட்டி வீட்டின் வெளியே அமர்ந்திருந்தார். பாட்டி வெளியே சென்ற சில வினாடிகளில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அக்காவும், தம்பியும் உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மண்ணுக்குள் சிக்கியிருந்த இருவரின் உடல்களை, வெளியே எடுத்தனர். இளகல் போலீசார் விசாரிக்கின்றனர்.