ADDED : மார் 22, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, ஆந்திராவின் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக, கப்பலில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்தப்படுவதாக சி.பி.ஐ.,க்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சுங்கத்துறை உதவியுடன் சி.பி.ஐ.,யினர் துறைமுகத்தில் சோதனை நடத்தினர். அதில், ஒரு கப்பலில், மூட்டைகளுடன் 25,000 கிலோ கோகைன் போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப் பட்டது.
போதைப் பொருளை அளவிடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், இருப்பினும் அவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

