ADDED : மே 30, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:டில்லியில் கடைக்குள் புகுந்த இருவர் அதன் உரிமையாளரை சுட்டுக் கொன்று விட்டு தப்பினர்.
வடகிழக்கு டில்லி ஹர்ஷ் விஹாரை சேர்ந்தவர் சூரஜ்,32. கபீர் நகரில் அஹ்லாவத் பில்டிங் அருகே, குழாய் பொருத்துதல் மற்றும் பாலிஷ் செய்யும் சிறிய கடை நடத்தி வந்தார்.
நேற்று காலை 8:40 மணிக்கு இவரது கடைக்கு வந்த இருவர், துப்பாக்கியால் சூரஜை சரமாரியாக சுட்டனர். அவர் சரிந்து விழுந்ததும் இருவரும் தாங்கள் வந்த ஸ்கூட்டரில் தப்பினர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார், சூரஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்புக் கேமராக்களிலும் பதிவாகியுள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.