பருவ மழையால் பசுமையாகி கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்
பருவ மழையால் பசுமையாகி கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்
ADDED : ஆக 13, 2024 12:33 AM

மூணாறு : பருவ மழையின் இடையே தோன்றும் வெயிலில் தேயிலை தோட்டங்கள் ' பளீச்' என பசுமையாக கண்களுக்கு விருந்தளிக்கின்றது.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் இடுக்கி உள்பட எட்டு மாவட்டங்களுக்கு நேற்று வானிலை ஆய்வு மையம் பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது.இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டபோதும் அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை.
சுற்றுலா பகுதியான மூணாறில் பகல் 1:00 மணி வரை கோடை போன்று வெயில் சுட்டெரித்தது.
அதன்பிறகு அதற்கு மாறாக மாலை வரை மழை கொட்டித் தீர்த்தது.
மாவட்டத்திற்கு நேற்றும் ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் போன்று காலநிலை நிலவியது.
மூணாறில் நேற்று பகல் 3:00 வரை வெயில் காணப்பட்டது. அதன் பிறகு சிறிது நேரம் மழை பெய்தது.
பசுமை: பருவ மழையால் மலை, புல்மேடுகள், காடுகள், வனங்கள் என அனைத்தும் பசுமையாக காணப்படுகின்றன.
அவை மழை குறைந்து வெயில் தோன்றும் போது பசுமையுடன் ரம்மியமாக காணப்படுகின்றன. குறிப்பாக தேயிலை தோட்டங்கள் ' பளிச்' என பசுமையாக கண்களுக்கு விருந்தளிக்கின்றது.