கணவரை கட்டிபோட்டு உடலில் சிகரெட்டால் சுட்ட பெண் கைது
கணவரை கட்டிபோட்டு உடலில் சிகரெட்டால் சுட்ட பெண் கைது
ADDED : மே 08, 2024 01:33 AM
பிஜ்னோர், கணவரை கட்டி போட்டு, அவரது உடலில் சிகரெட்டால் மனைவி சூடு வைத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறிஉள்ளது.
உ.பி.,யின் பிஜ்னோர் பகுதியை சேர்ந்த இளம்பெண் மெஹர் ஜஹான். இவருக்கு ஒரு ஆண்டுக்கு முன், மனன் ஜைதி என்ற இளைஞருடன் திருமணம் நடந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் கணவருக்கு போதை பொருள் கொடுத்த ஜஹான், அவர் மயங்கியதும் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டுள்ளார். இதன்பின், கணவரின் மேல் அமர்ந்து அவரது மர்ம உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தியதுடன், கழுத்தை நெரித்து கொலை செய்யவும் முயன்றுள்ளார்.
இதில் காயம் அடைந்த கணவர் ஜைதி, பிஜ்னோர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தன்னை சிகரெட்டால் மனைவி சுடும் வீடியோ ஆதாரத்துடன் ஜைதி அளித்த புகாரின் அடிப்படையில், சித்ரவதை செய்தல், கொலை முயற்சி, தாக்குதல் உள்ளிட்ட பிரிவு களில் வழக்குப்பதிவு செய்து கடந்த 5ம் தேதி செயஹரா போலீசார் மனைவி மெஹர் ஜஹானை கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜைதியை, அவரது குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் வருமாறு அழைத்து, தினமும் மனைவி அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியது தெரியவந்தது.
மனைவியை போலீசாரிடம் ஆதாரத்துடன் காட்டிக் கொடுக்கும் வகையில், அவருக்கே தெரியாமல், வீட்டில் கண்காணிப்பு கேமராவை, ஜைதி பொருத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

