இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் முதல்முறை ஓட்டு போட்டவர்கள் பரவசம்
இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் முதல்முறை ஓட்டு போட்டவர்கள் பரவசம்
ADDED : ஏப் 27, 2024 05:56 AM

முதல்முறை ஓட்டு போட்டு உள்ளேன். மனதிற்குள் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி. இரவில் இருந்தே ஓட்டு போடுவதை, ஆர்வமாக எதிர்நோக்கி இருந்தேன். கை விரலில் வைத்த மையுடன், 'செல்பி' எடுத்து உள்ளேன். ஓட்டு போடுவது நமது கடமை. இனி ஒவ்வொரு தேர்தலிலும், ஓட்டு போடுவதை எண்ணி ஆர்வமாக உள்ளேன்.
சுகைல், கல்லுாரி மாணவர்
ராஜாஜிநகர்
***
ஓட்டு போடுவது நமது கடமை. முதல்முறையாக ஓட்டுப் பதிவு செய்து இருக்கிறேன். யாருக்கு ஓட்டு போடுவது என்று, எனக்கு மனதிற்குள் குழப்பம் இருந்தது. குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசித்தேன். அவர்கள் கூறிய நபருக்கு ஓட்டு போட்டு உள்ளேன். அந்த நபர் வெற்றி பெற்றால், நல்லது செய்வார் என்று நம்பிக்கை உள்ளது.
ஸ்ரேயா, கல்லுாரி மாணவி
ஸ்ரீராமபுரம்
***
படம்: 27_Manaksha K.P.Agrahara
ஓட்டு போடுவது நமது உரிமை. அதை யாருக்காவும் விட்டு தரக் கூடாது. முதல்முறை ஓட்டு போட்டது மகிழ்ச்சி. கடந்த 10 ஆண்டுகளாக, நமது நாட்டில் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை பார்த்து உள்ளோம். நிறைய வளர்ச்சிப் பணிகள் நடந்து உள்ளன. வளர்ச்சிப் பணிகளை மனதில் வைத்து, ஓட்டு போட்டு இருக்கிறேன். எல்லோரும் ஓட்டு போடணும்.
மானக் ஷா, கல்லுாரி மாணவி
கே.பி., அக்ரஹாரா.
***
முதல் முறையாக ஓட்டு போட்டேன்; புதிய அனுபவமாக இருந்தது. அனைவரும் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லலாம். மக்களுக்கு யார் நல்லது செய்துள்ளனர், வருங்காலத்தில் செய்வார் என உணர்ந்து ஓட்டு போட்டுள்ளேன். இளைஞர்கள் தான் நாட்டின் எதிர்காலம் என்பதால், நாம் எடுக்கும் முடிவு தேசிய அளவில் எதிரொலிக்கும்.
பிரியதர்ஷினி சரவணா,
பிசியோதெரபிஸ்ட்,
ஓக்லிபுரம்.
***
தேர்தலில் ஓட்டு போட்டோம் என்று இதற்கு முன்பு பலரும் கூறி கேட்டிருக்கிறேன். ஆனால், நானே ஓட்டு போட்ட அனுபவம் மிகுந்த உற்சாகத்தை தந்தது. நம் நாட்டுக்காக ஓட்டு போட்டோம் என்பதை நினைக்கும்போதே பெருமையாக உள்ளது. வருங்கால இந்தியாவுக்காக நான் ஓட்டு போட்டேன். ஓட்டு போடாதவர்கள் கண்டிப்பாக வருத்தப்படுவர். தங்கள் உரிமையை செய்ய தவறியவர்கள் யாருமே அரசின் திட்டங்கள் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என்பது என் கருத்து.
ரோஹித் குமார்,
கல்லுாரி மாணவர்,
எச்.ஏ.எல்., 2வது கட்டம்
***
முதல் முறையாக ஓட்டு போட்டது, நல்ல அனுபவமாக இருந்தது. தேர்தல் நடைமுறை எப்படி நடக்கும் என்பதை நேரில் பார்த்தேன். தேசியம் தான் பிரதானம். நாட்டை வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும் மாற்ற என் பொறுப்பை நான் செய்தேன். வருங்காலத்திலும் கண்டிப்பாக ஓட்டு போடுவேன்.
அக் ஷய்,
கல்லுாரி மாணவர்,
மல்லேஸ்வரம்
***

