ADDED : ஆக 18, 2024 11:33 PM

பெங்களூரு : ''எனக்கு எம்.எல்.ஏ.,வாக வேண்டும் என்ற அவசரம் இல்லை,'' என ம.ஜ.த., இளைஞர் பிரிவு தலைவர் நிகில் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா தொகுதி இடைத்தேர்தலில், ம.ஜ.த.,வுக்கு சீட் கிடைத்தால், கட்சி வேட்பாளரை களமிறக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டது. எனக்கு எம்.எல்.ஏ., ஆக வேண்டும் என்ற அவசரம் இல்லை. யாரை வேட்பாளராக களமிறக்குவது என, பா.ஜ., - ம.ஜ.த., மேலிட தலைவர்கள் ஆலோசித்து முடிவு செய்வர்.
கட்சியை பலப்படுத்துவது குறித்து, ஆலோசனை நடத்தினோம். கட்சியின் கடை கோடி தொண்டரையும், அடையாளம் காண்போம். இதில் எந்த குழப்பமும் இல்லை.
குமாரசாமியால் காலியான சென்னப்பட்டணா தொகுதியில், 60,000 முதல் 70,000 ம.ஜ.த., ஓட்டுகள் உள்ளன. தேவகவுடாவின் பங்களிப்பை, மக்கள் இன்னும் மறக்கவில்லை. குமாரசாமி 130 ஏரிகளை நிரப்பியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

