தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


ADDED : மே 30, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சொல்கிறார்கள் / 31/05/26 ஞாயிறு 1 இதழ்

––––––––––––

அவள் விகடன், 05/05/2026. பக்: 72

பட்டு வியாபாரத்தில்

தொடரும்

பாரம்பரியம்!

––––––

பட்டுப்புடவையில் பாரம்பரிய டிசைன்களை பிரபலமாக்கி வரும், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த மாமியார் – மருமகளான, 52 வயதாகும் அபிராமி மெய்யப்பன், 28 வயதாகும் உமையாம்பிகை:

* அபிராமி மெய்யப்பன்: என் கணவருக்கு பட்டு வியாபாரம் தான் தொழில். நானும் தொழில் செய்ய வேண்டும் என, மனதில் மிகவும் ஆழமாக பதிய வைத்தவர் என் மாமியார் தான். 10ம் வகுப்பு படித்த என்னிடம், ‘பெண்ணுக்கு பொருளாதார சுதந்திரம் கிடைத்தால் எல்லாம் கிடைக்கும்’ என்று கூறி, வியாபாரம் செய்ய ஊக்குவித்தார்.

செட்டிநாடு என்று சொன்னாலே, புடவையில் கட்டங்கள் தான் பிரதான டிசைன். அந்த பிரதான டிசைன்களையும், காஞ்சிபுரத்தின் பாரம்பரியத்தையும் சேர்த்து உருவாக்கிய புடவைகளை நாங்கள் வியாபாரம் செய்து வந்தோம்.

டில்லி, மும்பை, கொல்கட்டா உள்ளிட்ட பல நகரங்களில் இருந்தும் காரைக்குடி வந்து, புடவைகளை வாங்கி செல்வர். பலரும், ‘முழு ஜரிகைகள் வைத்து, புடவைகளை நெய்து தாருங்கள்; புது டிசைன்கள் போடுங்கள்’ என்று கேட்பர். ஆனால், நான் பாரம்பரிய டிசைன்களை மட்டும் தான் நெய்யணும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

வியாபாரத்தில் மகனும், மருமகளும் இணைந்தனர். மருமகள் தகவல் தொழில்நுட்ப துறையில் பார்த்த வேலையை விட்டுவிட்டு தொழிலில் இணைந்தது, எனக்கு மிகப்பெரிய பலம்!

* உமையாம்பிக்கை: பெண் பார்க்க வந்தபோது, என் மாமியார், ‘தொழிலில் ஆர்வம் இருக்கா?’ என்று தான் முதலில் கேட்டார். ‘சமைக்கத் தெரியுமா’ என்று கேட்கிற மாமியார்களுக்கு மத்தியில், தொழில் தெரியுமா என்று கேட்ட மாமியார் தனித்துவமாக தெரிந்தார். திருமணம் ஆனதும் வேலையை விட்டுவிட்டேன்.

என் கணவர், புடவைகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்துவார். எங்கள் பிராண்டுக்கு மாமியார் தான், ‘மாடலாக’ இருப்பார். ஒரு முழு பட்டுப் புடவையை நெய்து முடிக்க, இரண்டு வாரங்கள் ஆகும். ஒரு புடவைக்கு பின், 16 பேரின் உழைப்பு இருக்கும்.

இப்போது, நாங்கள் கோர்வை முறையில் நெய்கிறோம். கோர்வை நெய்தல் என்பது, புடவையின் உடல் மற்றும் பார்டருக்கு வெவ்வேறு நுால்களை பயன்படுத்தி, நெய்து ஒன்றோடு ஒன்றை கையால் இணைக்க வேண்டும். நெய்து முடிக்க பல நாட்கள் ஆகும். அதனால், கோர்வை முறை நெசவாளர்கள் மிகவும் குறைவு.

இப்படியே போனால், கோர்வை நெசவு இல்லாமலே போய்விடும் என்பதால், 100 கைத்தறிகளை இயக்க ஆரம்பித்துள்ளோம். இன்று பிரபலமாக இருக்கும் டிசைன்களை வைத்து நெய்தால், கூடுதலாக பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், நம் அடையாளம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக இதை தொடர்கிறோம்.

தொடர்புக்கு: 94864 47946

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us