தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள்


ADDED : ஜூலை 23, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சொல்கிறார்கள்/ 24/07/26 வெள்ளி இதழ்

---––––––––

பசுமை விகடன், ஏப்ரல்., 25. 2026. பக்: 42

சமவெளியில்

மிளகு சாகுபடி

சாதித்த விவசாயி!

---------–––––––––––

சமவெளி பகுதியிலும் மிளகு சாகுபடி செய்ய முடியும் என்பதை நிரூபித்து வரும், புதுக்கோட்டை மாவட்டம், சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த, 67 வயதாகும் செந்தமிழ்செல்வன்:

நாங்கள் விவசாயக் குடும்பம். தற்போதுள்ள பிளஸ் 2 போல, அந்த காலத்தில் பி.யூ.சி., படித்து முடித்ததும், மேற்படிப்பு படிக்க வசதியில்லை. அதனால், அப்பாவுடன் விவசாயத்தில் இறங்கி விட்டேன்.

கரும்பு, மஞ்சள், கோதுமை மற்றும் சாக்லேட் தயாரிக்க பயன்படும், ‘கோகோ’ என, பலவிதமான பயிர்களை சாகுபடி செய்துள்ளேன். என்னுடைய சிறப்பான கோகோ சாகுபடியை பாராட்டி விருது கொடுத்தது, ‘டாடா’ நிறுவனம். அதற்காக, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அய்யா போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார்.

ஆரம்பத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தி, விவசாயம் செய்து வந்தேன். ரசாயன விவசாயத்தால் ஏற்படும் பாதிப்புகள் தெரிந்த பின், 1985ம் ஆண்டு முதல், முழுதுமாக இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். 2 ஏக்கர் பரப்பில் தென்னை நடவு செய்தேன்.

எங்கள் பகுதியில் பள்ளி ஆசிரியராக இருந்த ஒருவர், தென்னையில் ஊடுபயிராக மிளகு நடவு செய்து, நல்ல லாபம் ஈட்டுகிறார் என்று கேள்விப்பட்டு, அவரை சந்தித்து, அது குறித்த தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டேன். அவரிடம் இருந்து மிளகு கன்றுகளை வாங்கி, என் தோட்டத்தில் நடவு செய்தேன்.

அவை வளர்ந்ததும், அந்த கொடிகளை தென்னை, பலா மரங்களில் படர விட்டேன். நான்கு ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்க ஆரம்பித்தது. அந்த நேரம் ஏற்பட்ட ‘கஜா’ புயலால், தோப்பில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்து விட்டன. அதன்பின், வாத நாராயணன், பூவரசு மரக்கன்றுகளை நடவு செய்தேன்.

அவை ஓரளவுக்கு வளர்ந்த பின், மீண்டும் மிளகு கன்றுகளை நடவு செய்து, அந்த மரங்களில் கொடிகளை படர விட்டேன். மொத்தம், 2 ஏக்கரில், 1,200 மிளகு கொடிகள் இருந்தன. அறுவடை செய்த காய்களை பதப்படுத்தி, மிளகாக விற்பனை செய்கிறேன். ஓராண்டுக்கு குறைந்த பட்சம், 1,000 கிலோ மிளகு கிடைக்கிறது.

வெளிச்சந்தைகளில் 1 கிலோ மிளகு, 1,000 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். நான், கிலோ, 800 ரூபாய் என்று நேரடியாக விற்பனை செய்கிறேன்.

இயற்கை விவசாயத்தில் விளைவிப்பதால், நல்ல பெருவெட்டாகவும், காரத்தன்மையுடனும் இருப்பதால், பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். ஓராண்டுக்கு, 1,000 கிலோ மிளகு விற்பனை வாயிலாக, 8 லட்சம் ரூபாய் வருமானமும், செலவுகள் 2 லட்சம் போக, 6 லட்சம் ரூபாய் லாபமாகவும் கிடைக்கிறது. நானும், மனைவியும் சேர்ந்து கடுமையாக உழைப்பதால், இந்த வருமானம் சாத்தியமாகிறது.

தொடர்புக்கு: 97873 74208.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us