sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வழக்கை தீர்த்து வைக்கும் தீர்த்த கணபதி

/

வழக்கை தீர்த்து வைக்கும் தீர்த்த கணபதி

வழக்கை தீர்த்து வைக்கும் தீர்த்த கணபதி

வழக்கை தீர்த்து வைக்கும் தீர்த்த கணபதி


ADDED : ஜூலை 01, 2024 09:17 PM

Google News

ADDED : ஜூலை 01, 2024 09:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோகர்ணாவில் உள்ள தீர்த்த கணபதியின் மகிமையை பற்றி தெரிந்தவர்கள், அவரை தரிசிக்காமல் இருக்க மாட்டார்கள். தொலைவில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து தரிசிக்கின்றனர்.

உத்தரகன்னடாவின், கோகர்ணாவில் கோடி தீர்த்தத்தின் வடக்கு திசையில் தீர்த்த கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் சிறப்பானது. இந்தியாவில் கதம்பர்கள் ஆட்சியில், இரண்டாவது நுாற்றாண்டில் கோகர்ணாவில் கணபதி ஆராதனை அதிகமாக இருந்தது. இங்கு கணபதி கோவில்கள் ஏராளம். இவற்றில் மிகவும் சிறப்பானது தீர்த்த கணபதி கோவில். இது பல நுாற்றாண்டுகளை கடந்துள்ளது.

இதற்கு முன், கோவிலுக்கு மேற்கூரை இருக்கவில்லை. வைஷ்ணவர்கள் நீரில் மூழ்கி, மந்திரங்கள் ஓதி கணபதியை பூஜித்தனர். கோடி தீர்த்தத்தில் நீராடி, தீர்த்த கணபதிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்கள் நீங்கும், வாழ்க்கை வளமாகும் என்பது ஐதீகம்.

கோகர்ணாவில் உள்ள கணபதி கோவில்களில் உள்ள விக்ரகங்கள், ஒரே விதமாக செதுக்கப்பட்டவை. தொல்பொருள் துறை தகவலின்படி, தீர்த்த கணபதி கோவிலில் உள்ள விக்ரகம், மிகவும் சிறியதாகும். இங்கு குடி கொண்டுள்ள கணபதியின் சக்தியை பற்றி உணர்ந்தவர்கள், மிகவும் குறைவு.

கோவிலுக்கு வந்து, பிரார்த்தனை செய்து பலன் அடைந்தவர்கள் மூலமாக கேள்விப்பட்டு, பக்தர்கள் வருகின்றனர். பெங்களூரு, கேரளா, ஹைதராபாத், தமிழகம் என, பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். வேண்டுதல் வைத்து பூஜிக்கின்றனர்.

தீர்த்த கணபதி, நீதிமன்ற வழக்குகளை தீர்த்து வைப்பதில் பிரசித்தி பெற்றவர். எனவே ஆண்டுக்கணக்கில், நீதிமன்றத்துக்கு அலைபாயும் பலரும், தீர்த்த கணபதியை தரிசித்து பிரார்த்தனை செய்து பலனடைகின்றனர்.

கோகர்ணாவுக்கு, அனைத்து இடங்களில் இருந்தும் பஸ், ரயில் வசதி உள்ளது. சொந்த வாகனங்களிலும் செல்லலாம்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us