ADDED : பிப் 21, 2025 10:46 PM

பாலக்காடு; பாலக்காடு அருகே, 20 கிலோ கஞ்சாவுடன் ஒடிசாவை சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, ஒற்றைப்பாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அச்சுத்அசோக் தலைமையில், வெள்ளியாடு என்ற பகுதியில் நேற்று போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்குள்ள தண்டவாளம் அருகே நடந்து சென்ற மூவரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிட்டபோது, 20 மற்றும் 96 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து நடந்த விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஷிபா கமனங்கா, 32, பிரதானை கமனங்கா, 22, ராஜேந்தரா சபார், 26, என்பதும், ஒடிசாவில் இருந்து கடத்தி வந்த கஞ்சாவை, சில்லறையில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்துள்ளதும் தெரிந்தது.
கஞ்சாவுடன், மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.