ADDED : ஆக 29, 2024 02:38 AM
கார்வார்: கார்வாரில் கடம்பா கடற்படை தளம் உள்ளது. இந்த தளத்தின் புகைப்படம், தளத்தை பற்றிய விவரத்தை வெளிநாட்டு உளவு துறைக்கு அனுப்பிய வழக்கில், கார்வாரை சேர்ந்த தீபக் என்பவரை, கடந்த ஆண்டு ஹைதராபாதில் வைத்து என்.ஐ.ஏ., கைது செய்தது.
இந்நிலையில் தீபக்கிடம் நடத்திய விசாரணையில், கடற்படை தளத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த, கார்வார் அருகே தோதுார் கிராமத்தின் சுனில் நாயக், ஈபவ் தண்டேல், அக் ஷய் ரவி நாயக் ஆகியோர், புகைப்படத்தை எடுத்து தனக்கு அனுப்பியதாக கூறினார்.
அவர்கள் மூன்று பேரை பற்றியும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்தனர். அக் ஷய் ரவி நாயக், கடற்படை வேலையை விட்டுவிட்டு, கோவாவில் உள்ள கேன்டீனில் வேலை செய்தது தெரிந்தது. அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சுனில் நாயக், ஈபவ் தண்டேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

