ADDED : ஜூன் 13, 2024 05:07 PM
ஜஹாங்கிர்புரி: சிறுவனை கொலை செய்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமேற்கு டில்லியின் ஜஹாங்கிர்புரி எச் பிளாக்கில் மணீஷ்குமார், 15, என்ற சிறுவன் செவ்வாய்க்கிழமை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தான்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுவனை கொன்றதாகக் கூறப்படும் பால்ஸ்வா பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த அபிஷேக், 20,, நாது, 19, தேவ், 18, ஆகிய மூன்று இளைஞர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு, சிறிய பிரச்னைக்காக அபிஷேக்கின் தம்பியை மணீஷ் அடித்துள்ளார். இதற்கு பழிவாங்கும் விதமாக, மணீஷை கொலை செய்ததாக அபிஷேக், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் ரத்தம் தோய்ந்த துணியை கைப்பற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.