ADDED : செப் 15, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துமகூரு: விநாயகர் சிலை கரைக்கும் போது, ஏரியில் மூழ்கி தந்தை, மகன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.
துமகூரு, துருவகெரேவின் மாரசந்திரா கிராமத்தில் வசித்தவர் ரேவண்ணா, 46. இவரது மகன் சரத், 26. கிராமத்தில் அனைவரும் சேர்ந்து, நேற்று காலை விநாயகர் சிலை அமர்த்தி, பூஜை செய்தனர்.
விநாயகரை நீரில் கரைக்கும் போது, ரேவண்ணா, அவரது மகன் சரத், அதே கிராமத்தில் வசித்த தயானந்தா, 35, நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர், ஏரியில் மூவரின் உடல்களை தேடுகின்றனர்.
தண்டினஷிவரா போலீசார் விசாரிக்கின்றனர்.