ADDED : ஆக 22, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:கேரளமாநிலம் மூணாறில் மாணவர்களுக்கு இடையே தட்டம்மை பரவல் கண்டறியப்பட்டதால் மூன்று பள்ளிகள் மூடப்பட்டன.
பழைய மூணாறில் உள்ள அரசு ஆரம்ப பள்ளி, ஆங்கிலம், தமிழ் ஆரம்ப பள்ளி, உயர் நிலை பள்ளி ஆகியவற்றில் படிக்கும் சில மாணவர்களுக்கு தட்டம்மை அறிகுறி தென்பட்டது. அது குறித்துபள்ளி நிர்வாகத்தினர் சுகாதார துறையினருக்கு தகவல் அளித்தனர். சித்திராபுரம் குடும்ப சுகாதார மையத்தைச் சேர்ந்த டாக்டர்கள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி மாணவர்களுக்கு பரிசோதனை செய்தனர்.
அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் இக்கா நகரில் உள்ள பிரீ மெட்ரிக் தங்கும் விடுதியை சேர்ந்த மாணவிகள் உட்பட 26 பேருக்கு தட்டம்மை நோய் கண்டறியப்பட்டது.
அந்நோய் மேலும் பரவ வாய்ப்புள்ளதால் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலின்படி மூன்று பள்ளிகளும் மூடப்பட்டன.