sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க... தனி விவாதம்! எதிர்க்கட்சிகள் கோரிக்கையால் சபையில் அமளி

/

 நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க... தனி விவாதம்! எதிர்க்கட்சிகள் கோரிக்கையால் சபையில் அமளி

 நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க... தனி விவாதம்! எதிர்க்கட்சிகள் கோரிக்கையால் சபையில் அமளி

 நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க... தனி விவாதம்! எதிர்க்கட்சிகள் கோரிக்கையால் சபையில் அமளி


ADDED : ஜூலை 02, 2024 01:49 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு பின், 'நீட்' தேர்வு முறைகேடுகள் குறித்து தனி விவாதம் நடத்துவதற்கு அனுமதிப்பது குறித்து உத்தரவாதம் அளிக்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ய நேரிட்டது.

லோக்சபாவில் நேற்று காலை அலுவல்கள் துவங்கியதும், ஜனாதிபதி உரை மீது விவாதம் நடத்த, சபாநாயகர் ஓம் பிர்லா தயாரானார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதாவது:

நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து இந்த சபையில் விவாதம் நடத்த விரும்புகிறோம். இது முக்கியமான பிரச்னை. இரண்டு கோடி இளைஞர்கள் இந்த முறைகேடு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மோசடி


கடந்த ஏழு ஆண்டுகளில், 70 தடவைக்கும் மேல் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்து மோசடி நடந்துள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவேதான் இப்பிரச்னை குறித்து பேச அனுமதி கேட்கிறோம்.

இவ்வாறு ராகுல் கூறியதும், சபாநாயகர் ஓம்பிர்லா, ''ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை எக்காரணம் கொண்டும் ஒத்திவைத்துவிட்டு இந்த விவாதம் நடத்த முடியாது. சபைக்கு என்று மரபுகள் உள்ளன. அதை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.

இதற்கு பதில் அளித்த ராகுல், ''இந்த மாண்பு மிக்க பார்லிமென்ட் வாயிலாக மாணவர்களுக்கு பொறுப்பான செய்தி அனுப்ப விரும்புகிறேன். அதற்கு கட்டாயம் நீட் முறைகேடு குறித்த தனி விவாதம் தேவையாக உள்ளது,'' என்றார்.

அதற்கு சபாநாயகர், ''அது குறித்து பிறகு முடிவு செய்து கொள்ளலாம்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

மற்ற சமயங்களில் எந்த தலைப்பிலிருந்தும் பேசலாம். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் வேறு எந்த விஷயங்களை பேசுவதற்கும் அனுமதி இல்லை.

வெளிநடப்பு


சபைக்கு என்று மரபுகளும் விதிமுறைகளும் உள்ளன. என் நீண்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன். தற்போது ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை நடத்துவது மட்டுமே சரியானதாக இருக்க முடியும்.

இவ்வாறு கூறியதும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ''ராஜ்நாத் சிங் கூறியதை ஏற்கிறேன். அப்படியானால், இந்த ஜனாதிபதி உரை மீதான விவாதம் முடிந்ததும் ஒருநாள் தனியாக ஒதுக்கி நீட் குறித்த விவாதம் நடத்த வேண்டும். அதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்,'' என்றார்.

அதற்கு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் ஒன்று திரண்டு அமளியில் இறங்கின. சபாநாயகர் ஓம் பிர்லாவோ, ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பேசும்படி, பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்கூரை அழைத்தார்.

இதையடுத்து விவாதம் துவங்கவே, அமளியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் சில நிமிடங்களுக்கு பின் லோக்சபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

பதவியேற்பு நிகழ்வில் கோஷம்: ஓம் பிர்லா வருத்தம்

தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளின் எம்.பி.,க்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுக்கும்போது தேவைற்ற கோஷங்களை போட்ட சம்பவம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதுகுறித்து லோக்சபாவில் சபாநாயகர் ஓம்பிர்லா பேசுகையில், ''அரசியமைப்பு சட்டத்தின் அம்சங்களை நாம் அனைவரும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.''அதில் கூறப்பட்டுள்ள 3வது அட்டவணையின்படி தான் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். சபையின் கண்ணியத்தையும், மதிப்பையும் குறைக்கும் வகையில் எம்.பி.,க்கள் நடந்து கொண்டது கவலையளிக்கிறது.''மேலும், சபைக்கு வெளியே என்னைப் பற்றி பல எம்.பி.,க்கள் குற்றம் சுமத்துகின்றனர். மைக்கை அணைப்பதாக கூறுகின்றனர். இருக்கையில் யார் இருந்தாலும் அவர்கள் அறிவுறுத்தலின்படியே மைக் இணைப்புகள் வழங்கப்படும். பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்த இருக்கையில் இருக்கும்போது சபையை சுமுகமாக நடத்துவதற்காக மைக்கை கட்டுப்படுத்துவது வழக்கம்தான். ''எனவே, யார் மீது குற்றம் சொல்லக் கூடாது. மூத்த எம்.பி., கொடிக்குன்னில் சுரேஷ் கூட சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து இருக்கும்போது மைக்கை கட்டுப்படுத்துவார். இவ்வாறு சபாநாயகர் கூறியதும், கொடிக்குன்னில் சுரேஷ் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தார். ''நான் அவ்வாறு ஒருபோதும் மைக்கை ஆப் செய்தது கிடையாது,'' என ஆவேசம் காட்ட, சபையில் சலசலப்பு ஏற்பட்டது,'' என்றார்.



தயாநிதி மீது அதிருப்தி

பா.ஜ., - எம்.பி., அனுராக் தாக்குர் நேற்று லோக்சபாவில் பேசினார். அப்போது, தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலினின் மகனும், மாநில அமைச்சருமான உதயநிதி, 'சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்' என பேசியது குறித்து கருத்து தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், தி.மு.க.,வை கடுமையாக சாடினார். அப்போது, தி.மு.க., - எம்.பி., தயாநிதி குறுக்கிட்டு பேசினார். இதை கண்டித்த சபாநாயகர் ஓம் பிர்லா, ''சபையில் யாராவது பேசிக் கொண்டிருக்கும் போது, குறுக்கிட்டு கருத்து தெரிவிப்பது, தயாநிதி மாறனுக்கு வழக்கமாகி விட்டது,'' என்றார்.



குழுவில் ராஜாவுக்கு இடம்

சபை நடவடிக்கைகளில் தனக்கு உதவ, ஒரு குழுவை, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று நியமித்தார். இதில், பா.ஜ., - எம்.பி.,க்கள் ஜக்தாம்பிகா பால், பி.சி.மோகன், சந்தியா ராய், திலீப் சைகியா, தி.மு.க., - எம்.பி., ராஜா, திரிணமுல் காங்., - எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதார், தெலுங்கு தேசம் எம்.பி., கிருஷ்ண பிரசாத் மற்றும் சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத் ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர். சபையில் சபாநாயகர் இல்லாத போது, இந்த குழுவில் உள்ளவர்கள் சபையை நடத்துவர்.



என்னிடம் சுவிட்ச் இல்லை'

கடந்த வாரம் லோக்சபாவில், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும் போது, மைக் அணைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சபையில் குரல் எழுப்பினர்.இது குறித்து, சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று கூறியதாவது:சபையில், யாருடைய பெயர் அழைக்கப்படுகிறதோ அந்த உறுப்பினர் பேசலாம். சபாநாயகர் உத்தரவுப்படி மைக் கட்டுப்படுத்தப்படுகிறது. மைக்கை அணைக்கும் சுவிட்ச், சபாநாயகரிடம் கிடையாது. இதை எம்.பி.,க்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே சபாநாயகராக இருந்த அனைவருக்கும் இந்த விஷயம் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us