ADDED : செப் 14, 2024 11:33 PM
தங்கவயல்: -உரிகம் பகுதியில் உள்ள தங்கத்தாய் திருத்தலத்தின் 49ம் ஆண்டு விழா இன்று தேர் பவனியுடன் நடக்கிறது.
தங்கவயலில் பிரசித்தி பெற்ற தங்கத்தாய் திருத்தலத்தின் 49ம் ஆண்டு விழாவை முன்னிட்டு இம்மாதம் 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
அன்று முதல் நேற்று 14ம் தேதி வரை தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி நடந்தது. 49ம் ஆண்டு நிறைவும் 50ம் ஆண்டு பொன் விழா துவக்கமும் இன்று நடக்கிறது.
இன்று காலை 6:00 மணி, 8:30, மதியம் 12:00, பகல் 2:00 மணிக்கு அருட்தந்தைகள் ஜெயகரன், அந்தோணி பிரவீன் ராஜன், வினோபேபியன், ஆரோக்கியதாஸ், சூசையப்பர் ஆகியோர் தமிழிலும்; காலை 7:00 மணிக்கு டோம்னிக் சேக்குவேரா ஆங்கிலத்திலும் திருப்பலி நடத்துகின்றனர்.
மாலை 4:30 மணிக்கு கூட்டு திருப்பலியை தொடர்ந்து, பொன் விழா தொடக்க விழா, திவ்ய நற்கருணை, தங்கத்தாய் அலங்கார தேர் பவனியை பெங்களூரு உயர் மறை மாவட்ட துணை பேராயர் ஜோசப் சூசைநாதன் துவக்கி வைக்கிறார்.