ADDED : மே 19, 2024 03:28 AM
ஆன்மிகம்
பிரம்மோற்சவம்
l ஸ்ரீமத் நம்மாழ்வார் 143வது பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு பூஜைகள். நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை: தேவநாதன் சுவாமிகள் முன்னிலையில் நாலாயிர திவ்யபிரபந்த சேவா காலம், ததியாராதனை; மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை: அகில ஸ்ரீ வைஷ்ணவ பாகவத சுவாமிகளும், ஆண்டாள் கோஷ்டிகளால் திருவாய்மொழி பண்ணிசை. இடம்: ஸ்ரீமத் நம்மாழ்வார் சன்னிதி, கவுதமபுரம், ஹலசூரு, பெங்களூரு.
நரசிம்ம ஜெயந்தி மற்றும் நம்மாழ்வார் திருநட்சத்திரம்
l நரசிம்ம ஜெயந்தி மற்றும் நம்மாழ்வார் திருநட்சத்திரத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடக்கிறது. நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை: பிரபந்தம், சேவா காலம், சாத்துமுறை ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல். இடம்: பான்பெருமாள் கோவில் கிருஷ்ணா மந்திர், ஹலசூரு, பெங்களூரு.
அஷ்டபந்தன கும்பாபிஷேகம்
l திரவுபதி அம்மன் கோவிலில் நுாதன விநாயகர், சுப்பிரமணியர், திரவுபதி, தர்மராஜா சுவாமி, போத்தராஜா விக்ரஹங்கள் பிரதிஷ்டாபன அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது. நேரம்: அதிகாலை 5:00 மணி: இரண்டாம் கால யாக பூஜை, பிம்பசுத்தி ரக் ஷபந்தனம், நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, விசேஷ திரவ்ய ஹோமங்கள், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை; 8:15 மணிக்கு மேல் 9:30 மணிக்குள்: மஹா கும்பாபிேஷகம், தீபாராதனை. இடம்: ஸ்ரீகிருஷ்ண பகவான் திரவுபதி அம்மன் கோவில் அறக்கட்டளை, ஓல்டு மார்க்கெட் ரோடு, சிவாஜி நகர், பெங்களூரு.
பஜனை உற்சவம்
l வாசவி சாஸ்த்ரா பஜனை உற்சவம் நடக்கிறது. நேரம்: மாலை 5:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை. இடம்: கன்னிகா பரமேஸ்வரி கோவில், 8வது தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு.
பொது
இயற்கை அரிசி மாநாடு
l சஹாஜ சம்ருதா மற்றும் ரீபில்டு இந்தியா பண்ட் மற்றும் சேவ் அவர் ரைஸ் விழிப்புணர்வு' அமைப்புகள் இணைந்து, இயற்கை அரிசி மாநாடு நடத்துகிறது. நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: நஞ்சராஜ பகதுார் அரங்கம், வினோபா சாலை, மைசூரு.
களிமண் பயிற்சி
l 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு களிமண்ணில் பானை செய்ய பயிற்சி. நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1::00 மணி வரை மற்றும் மாலை 5:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.
யோகா, கராத்தே
l ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா. இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
கோடை பயிற்சி
l பட்டர்பிளை டேலன்ட் அகாடமி சார்பில் 6 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, கதை சொல்லுதல், அடிப்படை நடிப்பு, குரல் பயிற்சி, நடிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேரம்: காலை 9:00 மணி முதுல் 10:00 மணி வரை. இடம்: பட்டர்பிளை டேலன்ட் அகாடமி, 54, 10வது 'ஏ' பிரதான சாலை, முதல் பிளாக், பானஸ்வாடி.
இசை
l மார்கோபோலோ கபே வழங்கும் கோரமங்களா கரோக்கி நைட். நேரம்: இரவு 10:00 மணி முதல் 11:15 மணி வரை. இடம்: மார்கோபோலோ கபே, 43, தரை தளம், 'பி' குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, பெங்களூரு.
காமெடி
l அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப் வழங்கும் 'கிரவுண்டெட் காமெடி நைட்'. நேரம்: இரவு 9:00 மணி முதல் 10:30 மணி வரை. இடம்: அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
l காமெடி ஷாட்ஸ் வழங்கும் வைல்டு காமெடி நைட். நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.
l தி பிளாக்பக் காமெடி வழங்கும் ஜே.பி.நகர் காமெடி நைட். நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை. இடம்: கிளேஒர்க்ஸ் பரிஸ்டா, 39, 15வது குறுக்கு சாலை, வெளிவட்டசாலை, ஜே.பி., நகர், பெங்களூரு.

