ஆன்மிகம்
சிவராத்திரி
74 வது மஹா சிவராத்திரியை ஒட்டி இசை நிகழ்ச்சி. சென்னை கார்த்திக் ஞானேஸ்வர பாகவதர் குழுவினரின் ஜெயதேவா அஸ்தபதி, நேரம்: காலை 9:00 முதல் மதியம் 3:30 மணி வரை; கோவிந்தபுரம் ஸ்ரீகாந்த் கவுண்தின்யா பாகவதர் குழுவினரின் திவ்யநாம சங்கீர்த்தனம், நேரம்: மாலை 4:30 முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: மகான் ஸ்ரீ ஒடுக்கத்துார் மடம், கங்காதர் ஷெட்டி சாலை, ஹலசூரு.
பரமஹம்சர் ஜெயந்தி
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 190 வது ஜெயந்தியை ஒட்டி, வேத பாராயணம், நேரம்: அதிகாலை 5:15 மணி; மங்களாரத்தி, பஜனை, நேரம்: 5:30 மணி; சிறப்பு பூஜை, நேரம்: 7:30 மணி; விஷ்ணு சஹஸ்ரநாமம், நேரம்: 8:00 மணி; பஜனை, நேரம்: 9:00 மணி; மஹாங்களாரத்தி, நேரம்: 10:45 மணி; ஹோமம், 11:00 மணி; பிரசாதம் வழங்கல், நேரம்: மதியம் 12:00 மணி; சாரதா சம்வித் பஜனை மண்டலியின் பஜனை, நேரம்: மாலை 4:30 மணி; ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் பாடங்கள் சொற்பொழிவு, நேரம்: 6:00 மணி; சிறப்பு பஜனைகள், நேரம்: இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் வளாகம், யாதவகிரி, மைசூரு.
ஸ்ரீராகவேந்திரர் பட்டாபிஷேகம்
ஸ்ரீ ராகவேந்திர சுவாமி வேச சமிதி சார்பில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி பட்டாபிஷேகம், வர்தந்தி மஹோற்சவம், கணபதி பூஜை, புண்யாஹவச்சனம், 108 கலசர ஸ்தாபனை, ஸ்ரீ வேதவியாச ஆஷ்டாக் ஷர மந்திரம், நேரம்: காலை 7:30 மணி. இடம்: ஸ்ரீராகவேந்திர சுவாமி மடம், ஜெயலட்சுமிபுரம், மைசூரு.
ரத யாத்திரை
சுயம்பு காளியம்மன் கோவிலில் பக்தர்கள் கைங்கர்யத்தால் புதிய தேர் வாங்கப்பட்டுள்ளது. ரத ஹோமம், பூர்ணாஹூதி, நேரம்: காலை 8:45 மணி முதல் 11:30 மணி வரை. இடம்: ஸ்ரீ சுயம்பு காளியம்மன் கோவில், ஹலசூரு.
பொது
சர்வதேச திரைப்பட விழா
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா துவக்கம், நேரம்: மாலை 5:00 மணி. இடம்: விதான் சவுதா வளாகம், பெங்களூரு.
விருது வழங்கல்
சுவர்ண பெலக்கு பவுண்டேஷன் சார்பில் கோ கோ விளையாட்டு வீராங்கனை சைத்ராவுக்கு 'அம்பிகா ரத்னா' விருது வழங்கல், நேரம்: மாலை 4:30 மணி. இடம்: கங்கமதஸ்த்ரா சமுதாய பவன், சுங்கதகேரி, மைசூரு.
பிறந்த நாள் விழா
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாள் விழாவை ஒட்டி, தி.மு.க., கொடி ஏற்றி இனிப்பு வழங்கல். நேரம்: காலை 10:00 மணி. இடம்: காந்தி சதுக்கம், ராபர்ட்சன் பேட்டை.
பயிற்சி
ஆண், பெண் இரு பாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.
களி மண்ணில் வடிவம் கொடுத்தல். நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை; 5:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.
ஓவியம் வரைய பயிற்சி, நேரம்: மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ்.
சமையல் பயிற்சி, நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.
இசை
தி ஆர்ட் கேலரி வழங்கும் பாடலாசிரியர், பாடகர் அஜய் நாதனின் 'லைவ்', நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:20 மணி வரை. இடம்: தி ஆர்ட் கல்லி ஸ்டூடியோ, 1023, முதல் தளம், 80 வது பிரதான சாலை, கோரமங்களா.
ரிதம் ஆப் எக்டசி வழங்கும் நிலிமேஷ் சக்ரபர்த்தியின் தபலா மற்றும் மோனித் பாதலின் சரோத் இசை நிகழ்ச்சி. நேரம்: மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஆர்ட்கோஜ், 31/2, முதல் தளம், 22வது பிரதான சாலை, இரண்டாவது பேஸ், ஜே.பி., நகர்.
ஜஸ் டர்ப்ஸ் வழங்கும் ராம் நாகராஜின் ஷாம் - இ - கஜல், நேரம்: இரவு 7:00 முதல் 9:30 மணி வரை. இடம்: ஜஸ் டர்ப்ஸ் சாக்லேடியர்ஸ், 9, ஜக்கூர் சாலை, ஜக்கூர்.
காமெடி
ஹர்ஷித் மஹாவரின் 'லிங்க்டு இன் பார்க்' காமெடி. நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: டிரங்க்லிங் காமெடி கிளப், 6, முதல் குறுக்கு சாலை, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.
தி காமெடி தியேட்டர் வழங்கும் ரஜத் சவுஹானின் காமெடி. நேரம்: மாலை 6:00 முதல் 9:00 மணி வரை மற்றும் 10:00 முதல் அதிகாலை 12:00 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 950, மூன்றாவது தளம், பேயட் டவர்ஸ், 12வது பிரதான சாலை, எச்.ஏ.எல்., இந்திரா நகர்.
சித்தார்த்தா, அம்ருதா, திபசிஷ், சிவமின் 'டுநைட் இன் ஒயிட்பீல்டு'. நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: காமெடி காரேஜ், இரண்டாவது தளம், சி.கே.ஆர்., காம்ப்ளக்ஸ், சீகேஹள்ளி - கன்னமங்களா சாலை, கிருஷ்ணராஜபுரம்.
சுமித் ஆனந்தின் கலக்கல் காமெடி, நேரம்: இரவு 10:00 முதல் 11:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, ஐந்தாவது பிளாக், கே.எச்.பி., காலனி, கோரமங்களா.
மனிஷ் ஜெயின், மஞ்சித் தாகூர், விஷால் சிவகுமாரின் 'வெரி லேட் நைட் காமெடி ஷோ'. நேரம்: இரவு 11:59 முதல் அதிகாலை 1:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, நேரம்: 1018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.