sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இன்று தொழிலதிபர்...!

/

இன்று தொழிலதிபர்...!

இன்று தொழிலதிபர்...!

இன்று தொழிலதிபர்...!


ADDED : ஜூலை 07, 2024 03:26 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டின் கண்கள் என, பெண்களை கூறுவதுண்டு. இதற்கு உதாரணமாக பலர் வாழ்கின்றனர். இத்தகைய பெண்களில் தாயம்மாவும் ஒருவர். கொத்தடிமையாக வாழ்ந்த இவர், அதிலிருந்து விடுபட்ட பின், தொழிலதிபராக ஓங்கி வளர்ந்துள்ளார். தொடர் பிரச்னைகளால் மனம் தளரும் பெண்களுக்கு, வழிகாட்டியாக திகழ்கிறார்.

தாயம்மா என்ற பெண்ணின் கதை, உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள தாய்மார்களின் சகிப்புத்தன்மை, தியாகத்துக்கு சாட்சியாக உள்ளது. மைசூரு, ஹுன்சூரின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தாயம்மா, 33. இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

இவரது கணவர் மூர்த்தி. கூலி வேலை செய்த வாழ்க்கை நடத்திய தம்பதி, 'தங்களை போன்று பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது. நன்றாக படித்து நல்ல வேலையில் அமர வேண்டும்' என, கனவு கண்டனர்.

வாழ்க்கை தலைகீழ்


தங்கள் குடும்பத்தினருக்காக, சொந்த வீடு கட்டினர். இதற்காக 60,000 ரூபாய் கடன் வாங்கினர். இந்த கடன் அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டது.

கடனை அடைக்க முடியாமல், கடன் வாங்கியவரிடம் கொத்தடிமைகளாக உழைத்தனர். 2015 முதல் 2017 வரை தாயம்மாவும், அவரது கணவரும் கஷ்டப்பட்டனர்.

கொத்தடிமைகளாக இருந்தபோது, பிள்ளைகளில் யாருக்காவது உடல் ஆரோக்கியம் பாதித்தால், தாயோ அல்லது தந்தையோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லலாம். மற்றொருவர் பணியில் ஈடுபட வேண்டும்.

பெண்களும் அதிகம் வேலை செய்ய வேண்டியிருந்தது. பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியவில்லை. உறவினர் நிகழ்ச்சிகளுக்குச் செல்லவும் அனுமதியில்லை.

பிள்ளைகளுக்கு ஆரோக்கியமான உணவு, நல்ல உடை உட்பட அடிப்படை தேவைகளை செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

நடவடிக்கை


தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இந்த விஷயத்தை மகளிர், குழந்தைகள் நலத்துறை கவனத்துக்கு கொண்டு சென்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், 2017ல் தாயம்மா, மூர்த்தி தம்பதிக்கு கொத்தடிமை வாழ்க்கையில் இருந்து விடுதலை கிடைத்தது.

அதன்பின் இவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. தம்பதி இளநீர் வியாபாரம் செய்கின்றனர். பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கின்றனர். தாயம்மாவுக்கு சமூகசேவையில் ஆர்வம் அதிகம்.

இவர் தற்போது குடும்ப தலைவி மட்டுமல்ல. தொழிலதிபராகவும் மாறியுள்ளார். தன் சொந்த முயற்சியால், கைவினை பொருட்களை தயாரித்து விற்பனை செய்கிறார். தையல் தொழில் செய்கிறார்.

வேலை வாய்ப்பு


சொந்தமாக ஆயத்த ஆடை நிறுவனம் வைத்துள்ளார். தன்னை போன்று கொத்தடிமைகளாக வாழ்ந்த பலரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றுகிறார். பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளார்.

இவர்களுக்காக டிரஸ்ட் அமைத்து உதவுகிறார். இலவசமாக கைவினை பொருட்கள் தயாரிப்பது, தையற்கலை பயிற்சி அளிக்கிறார்.

இவரிடம் பயிற்சி பெற்ற பெண்களுக்கு, தன் தொழில் நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். இவர்களுக்கு தாயம்மாவால் மறு வாழ்வு கிடைத்துள்ளது.

உலகத்தில் பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், அர்த்தமுள்ள வாழ்க்கை வாழும் தாயம்மா, மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக வாழ்கிறார்

- நமது நிருபர் -.






      Dinamalar
      Follow us