தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ இன்றைய வலைதள சுவரொட்டி!

இன்றைய வலைதள சுவரொட்டி!

இன்றைய வலைதள சுவரொட்டி!


ADDED : மார் 30, 2024 02:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2024 02:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லோக்சபா தேர்தல் வேளையில் கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரசும், முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் சமூக வலைதளங்களில் போஸ்டர் மோதலை நடத்தி வருகின்றன.

ஆயிரக்கணக்கான வாக்காளர்களைச் சென்றடைய சிறப்பான யுக்தியாக இது உள்ளது.

நேற்று மாலை கர்நாடக பா.ஜ., தன் 'எக்ஸ்' பக்கத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டி போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அதில், 'விவசாயிகளின் குழந்தைகளின் கல்விக்காக தாமரை நிதி கொடுத்தது. ஆனால் மாநிலத்தில் கடந்த 10 மாதங்களில் 692 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதை கை கொடுத்தது'.

'கொடுக்கும் தாமரையை பாராட்டுங்கள் - ஆயுள் கைதியை வீட்டுக்கு அனுப்புங்கள்' என்ற கோஷம் இடம்பெற்றுள்ளது.

இதற்கு பதிலடியாக பிரதமர் நரேந்திர மோடி படத்துடன் 'பா.ஜ.,வில் இணைந்து பயன்பெறுங்கள்' என்ற தலைப்பில் நேற்று போஸ்டரை மாநில காங்கிரஸ் தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், 'பா.ஜ.,வில் இணைந்து, புலனாய்வு சோதனைகளில் இருந்து விடுவிக்கப்படுங்கள், 'சுத்தமான, நேர்மையான நபர்' என்ற சான்றிதழ் பெறுங்கள், அரசாங்க ஒப்பந்தங்களுக்கான வாய்ப்பு ஆகியவற்றை பரிசாக பெறுங்கள்' என்று கூறப்பட்டுஉள்ளது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us