ADDED : ஆக 08, 2024 11:51 PM
சிக்கபல்லாபூர்: மனைவிக்கு, 'செக்ஸ் டார்ச்சர்' கொடுத்த காமுக கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சிக்கபல்லாபூர் சிட்லகட்டா டவுன் பில்சர்ஸ் சதுக்கத்தை சேர்ந்தவர் மோசின் பாஷா, 39. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, மூன்று மகள்கள் உள்ளனர். மொபைல் போனில் ஆபாச படங்களை பார்த்துவிட்டு, அதில் வருவது போன்று, 'உறவு' கொள்ள வரும்படி, மனைவியிடம், மோசின் பாஷா கூறி உள்ளார். ஆனால் இதற்கு மனைவி மறுத்து உள்ளார்.
இதனால், மனைவியை மோசின் பாஷா தாக்கி உள்ளார். மனைவி கண்முன்பே இன்னொரு பெண்ணுக்கு வீடியோ கால் செய்து, அருவருக்கத்தக்க வகையில் நடந்து உள்ளார். மனைவி துாங்கும் போது அவரை ஆபாசமாக புகைப்படங்கள், வீடியோ எடுத்து உள்ளார்.
'பக்கத்து வீட்டு பெண்கள், உனது தோழியர் மொபைல் நம்பரை வாங்கி தர வேண்டும். இல்லாவிட்டால் உன் ஆபாச புகைப்படங்கள், வீடியோவை விற்பனை செய்வேன். பெங்களூரில் எனக்கு தெரிந்த ஆப்பிரிக்கர்கள் உள்ளனர். அவர்களிடம் உன்னை 40,000 ரூபாய்க்கு விற்பேன்' என்றும் மிரட்டி உள்ளார்.
மனம் உடைந்த மனைவி, மோசின் பாஷா மீது சிட்லகட்டா போலீசில் புகார் செய்தார். நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
அவரது மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் ஏதாவது பெண்களின் ஆபாச வீடியோக்கள் உள்ளதா என்று, ஆய்வு செய்து வருகின்றனர்.