தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/ ரயிலில் கழன்ற பெட்டிகள்; பயணியர் அலறல்

ரயிலில் கழன்ற பெட்டிகள்; பயணியர் அலறல்

ரயிலில் கழன்ற பெட்டிகள்; பயணியர் அலறல்


ADDED : மார் 05, 2025 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2025 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி; உத்தர பிரதேசத்தில், நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயிலின், 'கப்ளிங்' உடைந்து, ரயில் பெட்டிகள் கழன்று முன்னும் பின்னுமாக சென்றதால் பயணியர் அலறினர்.

உ.பி.,யின் சந்தவுலி மாவட்டத்தில் உள்ள தீன் தயாள் உபாத்யாயா சந்திப்பு ரயில் நிலையத்துக்கு, ஒடிசா செல்லும் நந்தன் கனன் எக்ஸ்பிரஸ் ரயில் சமீபத்தில் வந்தது. அப்போது, ரயிலின் 'எஸ் 4, எஸ் 5' ஆகிய பெட்டிகளை இணைக்கும் கப்ளிங் செயின் உடைந்தது.

இதனால், இரு பெட்டிகளும் கழன்று, முன்னும் பின்னுமாக சென்றதால் உள்ளே இருந்த பயணியர் அலறினர்.

இதையடுத்து, கழன்ற பெட்டிகள் தீன் தயாள் ரயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, ரயிலுடன் இணைக்கப்பட்டன. இதனால், நான்கு மணி நேர தாமதத்துக்கு பின் ரயில் புறப்பட்டுச் சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us