ADDED : ஆக 29, 2024 10:58 PM
துமகூரு: துமகூரு மாவட்டம், குனிகல் தாலுகா, கோட்டே பகுதியை சேர்ந்தவர் ஹனிஷா, 21. திருநங்கையான இவருடன், மாண்டியாவின் ஆதில், 23, என்ற இளைஞர் பழகி வந்தார். இருவரும் ஆறு மாதங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். திருநங்கையர் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்காக, ஹனிஷா வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வந்தார்.
இதனால், தன்னுடன் நேரம் செலவிடுவது இல்லை என்று கூறி, ஆதில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அவரின் தொல்லை தாங்க முடியாமல், ஹனிஷா, அவரை விட்டு விலக ஆரம்பித்தார்.
இதனால், கோபமடைந்த ஆதில், நேற்று ஹனிஷாவை சந்திக்க கோட்டேவுக்கு வந்துள்ளார். அப்போது, அவரிடம் வாக்குவாதம் செய்தவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அவரை குத்தினார். மார்பு, வயிறு உட்பட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டு, ஹனிஷா அதே இடத்தில் விழுந்தார்.
இதை பார்த்த அப்பகுதியினர், ஹனிஷாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பியோட முயற்சித்த ஆதிலை, அப்பகுதியினர் பிடித்து குனிகல் போலீசில் ஒப்படைத்தனர். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.