ADDED : செப் 14, 2024 11:55 PM
ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் திருநங்கையரை நியமிக்க உள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று அறிவித்தார்.
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ஹைதராபாத் நகரின் போக்குவரத்து நிலைமை குறித்து ரேவந்த் ரெட்டி ஆய்வு செய்தார்.
அப்போது ஊர்க்காவல் படையில் திருநங்கையரை சேர்த்து, அவர்களுக்கு ஹைதராபாதின் நெரிசல் மிகுந்த சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி வழங்கலாம் என, போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார்.
முதல்வரின் ஆலோசனைப்படி, ஹைதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கையரை பணியமர்த்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆர்வமுள்ள திருநங்கையரை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்கும் பணி விரைவில் துவங்கும் என போலீசார் தெரிவித்தனர்.