UPDATED : மே 05, 2024 10:43 PM
ADDED : மே 05, 2024 10:34 PM

புதுடில்லி: வெளிப்படைதன்மை மற்றும் எளிமை ஆகியவற்றை தனது ஆடை வெளிப்படுத்துவதாக ராகுல் கூறி உள்ளார்.
கடந்த ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் காங்., முன்னாள் தலைவர் ராகுல் பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் அணிந்து சென்ற வெள்ளை ஆடை அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. அது அவருடைய டிரேட் மார்க் ஆனது.
இந்நிலையில் ஏன் எப்போதும் வெள்ளை உடை என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது குறித்து காங்கிரஸ் தனது சமூக ஊடக சேனல்களில் இரண்டு நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதில் ஆடை குறித்து ராகுல் கூறியிருப்பதாவது: நான் எப்போதும் ஆடைகளை பற்றி கவலைப்படுவதில்லை. எளிமையாக இருக்கவே விரும்புகிறேன். மேலும் வெளிப்படைத்தன்மை , மற்றும் எளிமை ஆகியவற்றை வெளிப்படுத்துவதால் வெள்ளை நிற ஆடை அணிகிறேன் என தெரிவித்து உள்ளார்.
மேலும் பாரத்ஜோடோ யாத்திரை பற்றி கூறுகையில், சித்தாந்தத்தைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் நீங்கள் அதிகாரத்தை நோக்கி ஒரு பெரிய அமைப்பாக செல்ல முடியாது. ஏழை, பெண்களுக்கு ஆதரவான, அனைவரையும் சமமாக நடத்தும் நமது சித்தாந்தத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து நடத்திய பாரத் ஜோடோ நீதி யாத்ரா பற்றி கூறுகையில் 'நாட்டிற்கு என்ன தேவை என்பதைப் பற்றி சிந்திக்க வைக்கிறது' என வீடியோவில் தெரிவித்து உள்ளார்.