தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ பசுமை பகுதியை பராமரிக்க 'ட்ரீ ஆம்புலன்ஸ்'

பசுமை பகுதியை பராமரிக்க 'ட்ரீ ஆம்புலன்ஸ்'

பசுமை பகுதியை பராமரிக்க 'ட்ரீ ஆம்புலன்ஸ்'


ADDED : ஏப் 11, 2024 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி,:நோய்வாய்ப்பட்ட மரங்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பசுமையான சொத்துக்களைப் பராமரிப்பதற்கும் 'மர ஆம்புலன்ஸ்' ஒன்றை என்.டி.எம்.சி., எனும் புதுடில்லி முனிசிபல் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதுடில்லி முனிசிபல் கவுன்சில் நிர்வகிக்கும் பகுதிகளில் 1.80 லட்சம் மரங்கள் உள்ளன. தவிர 1,500 ஏக்கர் பசுமைப் பகுதிகள், 135 பசுமை வழித்தடங்கள் உள்ளன.

இவற்றில் 10 பெரிய பூங்காக்கள், 1,400 குடியிருப்பு காலனி பூங்காக்கள், 50 சுற்றுவட்டங்கள், மூன்று ஹைடெக் நர்சரிகள் உட்பட 10 துறை சார்ந்த நர்சரிகள் மற்றும் மூன்று சர்வதேச உறவுகள் நினைவு பூங்காக்கள் உள்ளன.

இவற்றை பசுமையுடனும் இதே ஆரோக்கியத்துடனும் பராமரிப்பது என்பது என்.டி.எம்.சி.,க்கு மிகவும் சவாலானது. இவற்றை பராமரிக்க பல ஆயிரம் பணியாளர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில், 'மர ஆம்புலன்ஸ்' ஒன்றை என்.டி.எம்.சி., வாங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இயற்கை எரிவாயுவால் இயங்கப்படுவதால் இந்த ஆம்புலன்ஸ், சுற்றுச்சூழலுக்கு உகந்தது. இதில் முறையே 750, 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தண்ணீர் தொட்டிகள் உள்ளன.

மரங்கள், பசுமைப் பகுதிகளை நிர்வகிக்கத் தேவைப்படும் உபகரணங்கள், பூச்சிகொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகள் உள்ளிட்டவற்றை சேமித்து வைத்துக் கொள்வதற்கான இடமும் இந்த வாகனத்தில் உள்ளது.

மரங்களின் ஆரோக்கியத்தைப் பரிசோதிக்கவும், பூச்சித் தாக்குதல், உலர்ந்த மரங்கள் குறித்த புகார்கள் அல்லது அறிக்கைகளைப் பெறவும் ஆம்புலன்சில் ஒரு குழு நியமிக்கப்பட உள்ளது.

மரங்களை தாக்கும் நோய்கள், பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றின் தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க 'மர ஆம்புலன்ஸ்' பயன்படுத்தப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us