ADDED : செப் 10, 2024 10:43 PM
முசாபர்நகர்:தலித் சமூகத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, ஜாதி குறித்து இழிவாக பேசிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
முசாபர்நகர் மாவட்டம் சிகேடா அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் தசீன் மற்றும் ஷாலிம் ஆகிய இருவரும், அதே பகுதியில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை கடந்த 8ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும், ஜாதி ரீதியாக இழிவாகப் பேசியுள்ளனர். இதுபற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
சிறுமியின் தந்தை சிகோடா போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலிஸ் இன்ஸ்பெக்டர் ரூபாலி ராவ், வழக்குப் பதிவு செய்து சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். மேலும், தசீன் மற்றும் ஷாலிம் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.
இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.