ADDED : மார் 14, 2025 10:29 PM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு எஸ்.பி., அஜித்குமாரின் அறிவுரையின்படி, ஏ.எஸ்.பி., ராஜேஷ்குமார், போதை தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., அப்துல்முனீர் ஆகியோர் தலைமையிலான போலீசார், பாலக்காடு டவுன் தெற்கு போலீசாருடன் இணைந்து, போதை பொருள் தடுப்பு ரோந்து செல்கின்றனர்.
நேற்று காலை, பாலக்காடு நகரில் சோதனை நடத்திய போது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில் அருகே, சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இருவரின் பையை சோதனையிட்டனர். அதில், 28.09 கிராம் மெத்தாபெட்டமின் என்ற போதை மாத்திரை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
விசாரணையில், திருவனந்தபுரம் மாவட்டம், கோவளம் பாச்சலூர் பகுதியைச் சேர்ந்த அஜித், 23, எர்ணாகுளம் மாவட்டம் மூவாற்றுபுழா பகுதியை சேர்ந்த ராஜேஷ், 23, ஆகியோர் என்பது தெரிந்தது. கைது செய்த இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.