ADDED : ஜூலை 04, 2024 02:03 AM
பஹ்ரைச்:உ.பி.,யில் மழைநீர் நிரம்பிய குட்டையில் மூழ்கி, இருவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைரிகாட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெஹ்ரா கிராமத்தில் குல்ஷன் மிஸ்ரா, 13, அவரது உறவினர் சாகர் மிஸ்ரா, 11, ஆகியோர் செவ்வாக்கிழமை பழத்தோட்டத்தில் மாம்பழம் பறிக்கச் சென்றனர்.
பழத்தோட்டத்திற்குச் செல்லும் வழியில், குல்ஷன் மழைநீர் நிரம்பிய குட்டைக்குள் தவறி விழுந்து நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளார். அவரை காப்பாற்ற சாகர் முயன்றார். ஆனால் அவரும் நீரில் மூழ்கினார்.
உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், இருவரும் நீரில் மூழ்கிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கைரிகாட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எஸ்.கே., சிங் கூறுகையில், “சிறுவர்களை குட்டையில் இருந்து மீட்ட கிராமவாசிகள், மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன,” என கூறினார்.