ADDED : மார் 06, 2025 11:50 PM

பாலக்காடு; தேசிய நெடுஞ்சாலையில், பைக்குகள் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு கண்ணனுார் பகுதியைச்சேர்ந்தவர் பிரமோத், 55. இவர் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, தன் உறவினர் உதயகுமாருடன், 43, பைக்கில் பாலக்காடு - -திருச்சூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, எதிரே வந்த கொடுவாயூர் பிட்டுப்பீடிகை பகுதியைச் சேர்ந்த, பிளஸ் ஒன் மாணவர் ஹபீப் 16, அவரது நண்பன் அப்தாப் ரஹ்மான், 19, ஆகியோர் வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது.
இதில் பிரமோத் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த மற்ற மூவரையும், அப்பகுதி மக்கள் முதலில் பாலக்காடு அரசு மருத்துவமனையிலும், தொடர் தீவிர சிகிச்சை அளிப்பதற்காக, திருச்சூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஹபீப் நேற்று உயிரிழந்தார். விபத்து குறித்து குழல்மன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.