ADDED : மார் 02, 2025 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுக்மா : சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்டாராம் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.
அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இதில், இரண்டு நக்சல்கள் உயிரிழந்தனர்.
தப்பியோடிய மற்ற நக்சல்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். இந்த என்கவுன்டருடன், சத்தீஸ்கரில் இந்த ஆண்டு மட்டும் 83 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுஉள்ளனர்.