ADDED : ஜூன் 29, 2024 12:07 AM
சண்டிகர்:ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் கள் இருவர், பஞ்சாபில் கைது செய்யப்பட்டு, 66 கிலோ அபின், கார், டிராக்டர், 40,000 ரூபாய் பணம் மற்றும் 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து, பஞ்சாப் டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியதாவது:
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அபோஹர்- - கங்காநகர் சாலையில் சப்பன்வாலி என்ற இடத்தில் அமைத்திருந்த சிறப்பு சோதனைச் சாவடியில் ஒரு காரை நிறுத்தினர். அதில் இருந்த டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
காரில் இருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த யாத் என்ற சுக்யாத் சிங் மற்றும் ஜக்ராஜ் சிங் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இருவரிடமும் இருந்து 66 கிலோ அபின், கார், டிராக்டர், 40,000 ரூபாய் பணம் மற்றும் 400 கிராம் தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்தப் போதைப் பொருள் கடத்தல் கும்பல் இயக்கி வரும் 42 வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்ட்டு, அதில் இருந்த 1.86 கோடி ரூபாய் முடக்கப்பட்டுஉள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து அபின் உள்ளிட்ட போதைப் பொருட்களை ஸ்ரீ கங்காநகர் வழியாக டால்மிர் கெராவுக்கு காரில் கடத்தி வந்துள்ளனர்.
இருவரிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில் கடத்தல்கும்பலின் முக்கிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

