ADDED : ஆக 01, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலபுரகி: கலபுரகி, அப்ஜல்புராவின், கடனி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், 45. இவரது மனைவி லட்சுமி, 38. குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கு அவ்வப்போது தகராறு நடப்பது வழக்கம்.
நேற்று முன்தினம் மாலையும், தம்பதிக்கு சண்டை நடந்தது. மனம் வருந்திய லட்சுமி, தேவனகாவ் பாலத்தில் இருந்து, பீமா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். மனைவியை காப்பாற்ற சிவகுமாரும், அவரது உறவினர் ராஜு, 40 என்பவரும் ஆற்றில் குதித்தனர்.
லட்சுமி, மீனவர்கள் வீசிய மீன் வலையில்சிக்கியதால், அவரை மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.
ஆனால் சிவகுமாரும், ராஜுவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவலறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், சிவகுமார், ராஜுவின் உடல்களை நேற்று காலை மீட்டனர்.