ADDED : மார் 09, 2025 02:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், 47.7 கிலோ கஞ்சாவுடன் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு ரயில்வே ஸ்டேஷனில், அதில், நேற்று காலை, ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். அப்போது, கோவையில் இருந்து வந்த சந்திரகாச்சி - மங்களூரு விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பெண் உட்பட இருவரின் 'டிராலி' பெட்டிகளை சோதனையிட்டபோது, 47.7 கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில், 'அவர்கள் இருவரும் மேற்கு வங்கம் ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த, சஜல் ஹஸ்தர், 36, லவ்லி மாலாகர், 33, என்பதும், கண்ணுார் வளபட்டினம், மட்டனுார் பகுதியை மையமாகக் கொண்டு, கஞ்சா விற்பனை நடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.