ADDED : ஏப் 07, 2024 01:05 AM
குருகிராம்:ராஜஸ்தான் மாநிலம் கெக்ரி மாவட்டம் தந்தோட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மா, சரணா போலீசில் கொடுத்துள்ள புகார்:
கடந்த இரண்டு மாதங்களாக என் கணவர் சோனு பகாரியா மற்றும் குழந்தைகளுடன் ஹரியானாவின் குருகிராம் அருகே, ராம்புரா கிராமத்தில் கூடாரம் அமைத்து வசித்தேன். மார்ச் 24ம் தேதி ஹோலி பண்டிகையன்று, என் கணவர் சோனு பகரியா மட்டன் கறி தயார் செய்து கொண்டிருந்தார்.
இரவு 8:00 மணிக்கு உறவினர்களான பிரதான், ராம்கிஷன், டீனு என்கிற சியாராம் ஆகியோர் எங்கள் கூடாரத்துக்கு வந்தனர்.
எல்லாரும் சேர்ந்து மது குடித்தனர். அப்போது தகராறு ஏற்பட்டது.
மூவரும் சேர்ந்து என் கணவரை சரமாரியாக அடித்தனர்.
பலத்த காயம் அடைந்த என் கணவரை காரில் சொந்த ஊருக்கு அழைத்து வந்தேன். ஆனால், வரும் வழியிலேயே இறந்து விட்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ராஜஸ்தானின் சரணா போலீசார், குருகிராம் போலீசுக்கு அதை மாற்றம் செய்தனர். குருகிராம் கெர்கி தவுலா போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம் சர்சுந்தா கிராமத்தைச் சேர்ந்த பிரதான் மற்றும் டீனு என்ற சியாராம் ஆகிய இருவரையும் பட்டோடி பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று முன் தினம் கைது செய்தனர்.
