ADDED : மே 11, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சி, கேரள மாநிலம் கொச்சி அருகேயுள்ள பாலரிவாட்டம் பகுதியில் நேற்று காலை பைக் ஒன்றில் இருவர் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கேரள அரசு போக்குவரத்து கழக பஸ், திடீரென அவர்கள் சென்ற பைக் மீது மோதியது.
தொடர்ந்து முன்னால் சென்ற மற்றொரு அரசு பஸ் மீதும், அந்த பஸ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் முன்னும் பின்னும் சென்ற இரு பஸ்கள் இடையே சிக்கி பைக் அப்பளம் போல் நொறுங்கியது.
அந்த பைக்கில் சென்ற இரு நபர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், மோதிய பஸ்சில் இருந்த பயணியர் சிலரும் காயம் அடைந்தனர். பைக் மற்றும் பஸ்சில் மோதிய அரசு பஸ்சின் டிரைவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.