ADDED : ஆக 09, 2024 02:52 AM

திமர்பூர்,:சிவசேனா உத்தவ் பாலசாகேப் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்குச் சென்று, அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலைச் சந்தித்தார்.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வருடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோரும் சென்றிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா உறுப்பினர்கள் சஞ்சய் சிங், ராகவ் சதா ஆகியோரும் உடனிருந்தனர்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா உத்தவ் பாலசாகேப் தாக்கரே கட்சி ஆகியவை, இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, இண்டியா கூட்டணித் தலைவர்களைச் சந்தித்து, அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினார்.
இதற்காக அவர் தேசிய தலைநகரில் முகாமிட்டுள்ளார்.