மத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மத்திய பட்ஜெட்: பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
ADDED : ஜூலை 11, 2024 02:27 PM

புதுடில்லி: வரும் ஜூலை 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
நடப்பு, 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் ஜூலை 22ம் தேதி துவங்கி, ஆகஸ்ட், 12ம் தேதி வரை நடக்க உள்ளதாக, மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, ஏழாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 11) பட்ஜெட்டில் இடம்பெற உள்ள, முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பின், தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.